ட்விட்டரில் ஷேவாக் வெளியிட்ட உலகக் கோப்பை அணி பட்டியல்

0
70

முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், தான் தேர்வு செய்தால் இது தான் தனது அணி என்று ஒரு பட்டியலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மும்பையில் இன்று நடைபெறும் தேர்வுக் குழு‌ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி ‌பங்கேற்கவுள்ளார். 15 பேர் கொண்ட இந்திய அணியில், கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தோனி,‌‌ ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகம்மது சமி, கேதார் ஜாதவ் ஆகிய 10 பேரின் இடம் ஏறக்குறைய உறுதியாகிவுள்ளது. விஜய் சங்கர்‌, கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, கலில் அகமது, ரிஷப் பண்ட் ஆகியோரில் 5 பேர் தேர்வாகக் கூடும் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், தான் தேர்வு செய்தால் இது தான் தனது அணி என்று ஒரு பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய 7 பேரை மறுபடியும் தேர்வு செய்துள்ளார். அதாவது விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தோனி, ஜடேஜா, பி குமார், சமி ஆகியோரை மறுபடியும் தேர்வு செய்துள்ளார். இவர்கள் 2015 உலகக்கோப்பையில் விளையாடியவர்கள்.

(ஷேவாக் வெளியிட்ட பட்டியல்)

புதிதாக கேதர் ஜாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்,ஜாகல் ஆகியோடை தேர்வு செய்துள்ளார். அவருக்கு பதில் அளித்துள்ள பலரும் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அணியில் வேண்டுமென தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here