முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், தான் தேர்வு செய்தால் இது தான் தனது அணி என்று ஒரு பட்டியலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மும்பையில் இன்று நடைபெறும் தேர்வுக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது.